கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும்.
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும். கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும்.