மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. மேலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளைச் சீர்செய்கிறது.
இருமல் சளி தொண்டையிலுள்ள நோய்த் தொற்று முதலானவற்றைக் குணமாக்க, மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் சளிப் பிரச்சினை தீரும்.
தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு அந்நீர் 50மிலி குறையும் வரை கொதிக்கவைத்து, பின் இதனை வடிகட்டி இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வந்தால் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.