தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் ‘பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.