வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நட்சத்திர பழம்...!!
நம் உடல் செயலான வியர்த்தலின் போதும், கழிவாகவும் வேகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
ஒரு நாளைக்கான விட்டமின் சி தேவையில் 57 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. பொதுவான நோய்களான சளி, இருமல், ஜலதோசம், வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று ஆகியவற்றிலிருந்து விட்டமின் சி பாதுகாக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் சுற்றுப்புறச்சூழலால் ஏற்படும் நச்சுக்கள் மற்றும் உடல் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் தாக்குதல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன.
இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும். எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
இப்பழத்தில் காணப்படும் அதிகளவு நார்ச்சத்து உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.