சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

திங்கள், 3 அக்டோபர் 2022 (18:16 IST)
சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது.


சின்ன வெங்காயங்களை தோல் உறித்து அதை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திதான் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் தற்காத்துக்கொள்ள உதவுகிறது. எனவே அதை எப்போதும் பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

எப்போதும் நெஞ்சு சளியை சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நுரையீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதை எப்படி வெளியேற்றுவது என யோசித்தால் இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவலாம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்