மைதா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுமா...?

மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும். 

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன.
 
க்ளைசெமிக் இண்டெக்ஸ் அளவு மைதாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மைதா உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின் உற்பத்தித்திறன் இருக்காது. ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும், நாளடைவில் சோர்ந்துபோய்விடும்.
 
மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும். 
 
மைதா மாவு பளிச்சென்று வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மைதா உணவுகள் மிருதுவாக இருப்பதற்காகவும் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதாவை பாலீஷ் பண்ணுவதற்காக பென்சாயில் பெராக்சைடு சேர்க்கிறார்கள்.
 
இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
 
மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்