குழந்தைகளுக்கு ஒரு வயதுவரை தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

ஒரு வயது தொடங்கிய  பிறகுதான்  குழந்தைக்கு பசும்பால் கொடுக்க வேண்டும். பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.
 
தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது.
 
இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்.
 
காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்