பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இன்சமாம் உல் ஹக் மீண்டு வர வேண்டுமென டிவீட் செய்துள்ளார். அந்த டிவீட்டில் நீங்கள் சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள். நீங்கள் களத்தில் எப்போதும் அமைதியான போட்டி மனப்பாண்மை உடையவர். விளையாட்டு மைதானத்தில் ஒரு போராளி. இந்த சூழலில் இருந்தும் நீங்கள் மீண்டு வருவீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.