சீத்தாப்பழம் பழவகைகளில் தனிப்பட்ட சுவையும், மணமும் உடையது. குளுகோசும், சுக்ரோசும் சம அளவில் இருப்பதால் அதிக இனிப்பு சுவையை தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும், இதில் உள்ள சத்துக்கள் இதயத்தை சீராக இயங்க உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த சக்தியை தரும் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இதன் இலை, தோல், விதை, மரப்பட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
சீத்தா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் இலை அருமருந்தாகும். இலைகளை அரைத்து புண்களுக்கு மேல் பூசி வர உடனடியாக குணமாகும். பூண்டுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து அரைத்து தேமல் மீது பூசிவர தேமல் மறையும்,
சீத்தாப்பழச்சாறு அருந்தி வர சரும வறட்சி நீங்கும். நரம்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் சி கணிசமான அளவு இருப்பதால் சளி பிடிக்காமல் தடுக்கிறது. சளி பிடித்தவர்கள் சாப்பிட்டாலும் சளியை குணமாக்கும், வேறு பாதிப்புகளை தராது.