அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
அவகேடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சரிசெய்யும்.
இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.
அவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.