ஆயில் புல்லிங் இரவு உணவுக்குப்பின் தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 முதல் 3 ஸ்பூன்கள் வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வாயில் அனைத்து இடங்களில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும் . எண்ணெய் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள்நிறம் ஆகும் வரை கொப்பளித்து திறந்த வெளியில் துப்பி விடவும்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சில, வாய்க்குள் தங்குவதாலும், புகைப்பழக்கத்தாலும் பிற சில காரணங்களாலும் வாய்க்குள் பாக்டீரியா தங்க வாய்ப்புகள் அதிகம். அவை வாய் துர்நாற்றம், சொத்தைப்பல், ஈறு வீக்கம் ஆகிய நோய்களுக்கு வழி வகிக்கிறது.