உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம் !!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:45 IST)
புரோட்டின், ஃபைபர், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல சத்துக்கள் பாதாம் பருப்பில் நிரம்பியுள்ளன.


பாதாம் பருப்பில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பாதாம் பெரிதும் உதவுகிறது.

இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊறிய பாதாம் பருப்பை சாப்பிட்டால் அது அதிக பலனைத் தரும். இதுவே பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கான சிறந்த முறையாகும்.

பாதாம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் பைபர் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கண்களில் ஆரோக்கியத்தையும், பார்வைத் திறனையும் மேம்படுத்த பாதாம் சாப்பிடலாம்.

அடிக்கடி பசி ஏற்படுவதை பிரச்சனையாக கருதும் நபர்கள் பாதாம் சாப்பிடுவது பசி ஏற்படுவதை தடுக்கும். பாதாமில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்து தான் அதிக அளவில் உள்ளது.

அதிக உடல் எடை உடையவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பாதாம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க பாதாம்  மிகவும் உதவுகிறது.

சருமத்தை எப்போதும் பொலிவுடனும், இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க பாதாம் உதவும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் உதவுகிறது. பாதாம் சாப்பிடுவது உங்கள் புத்தி கூர்மையையும், அறிவுத் திறனையும் அதிகரிக்க செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்