நோய் நம்மை நெருங்காமல் காக்கும் பழம் எது தெரியுமா...?

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:31 IST)
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.


ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட ஆப்பிள் பழம் உதவுகிறது. குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க ஆப்பிள் பழம் மிகவும் உதவுகிறது.

தினமும் ஒரு சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றுபவையாக உள்ளன.

தினந்தோறும் ஒரு  ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கலே ஏற்படாது. ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இதயம் சார்ந்த நோய்களில் இருந்து காக்க மிகவும் உதவும்.

ஆப்பிள் புற்றுநோயைத் தடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும் சக்தியுள்ளதாக இவை உள்ளன. தினமும் இரண்டு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல பயனளிக்கும்.

ஆப்பிளை அரைத்து தொடர்ந்து சில நாட்கள் உங்கள் முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி உங்களது சருமம் புதுப்பொலிவு பெறும். மேலும் ஆப்பிள் பழத்தில் உள்ள 'வைட்டமின் சி' இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒன்று. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தும் மிகவும் உறுதுணையானதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்