சரும பாதுகாப்பு முறைகளும் இயற்கை மருத்துவ குறிப்புகளும்...!!

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ, வீட்டில் நாம் சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன. தக்காளியும், தயிரும் தோலினை பளபளப்பாக வைக்கிறது. 

தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
 
ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம்  கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.
 
வீட்டில் எப்போதும் வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் தடவலாம். ரசாயன கலப்பு உள்ள  மாய்ச்சரைசர்களை தவிர்த்து விடுவது நல்லது. 
 
ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும். ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூசலாம்.
 
காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்