அத்திபழத்தை தினமும் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:40 IST)
அத்தி பழத்தை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கும்ம் உதவி புரியும். துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. அத்திபழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள பல நோய்கள் எளிதில் குணமாகிறது.


அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள நச்சுகளையும் நீக்குகிறது.

அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். அத்தி காய்களில் இருக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவி வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.
தோல் நோய்களை குணமாக்கும்

தினசரி 5 அத்திப்பழம் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி தாது விருத்தியாடையும். ஆண்மலட்டு தன்மை நீங்கும். போதைப் பழக்கம் மற்றும் இதர நோய்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் ஊற வைத்து, பின்பு தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலை குணமாக்க தினமும் 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட்டு வரவேண்டும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், அவை நம் உடலின் தேவையற்ற கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்