வாழை இலையில் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

வாழை ஒரு கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
 
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
 
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு  கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
 
வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
 
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம்.
 
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல்  அப்படியே இருக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்