அன்றாட உணவில் ஓட்ஸை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

வெள்ளி, 6 மே 2022 (18:06 IST)
ஓட்ஸ் ஒரு  தானியமாகும்,  அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள  அதிக உணவு நார்ச்சத்து மற்றும்  மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது.


ஓட்ஸ் உட்கொள்வதால் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு  ஓட்ஸ் உங்களுக்கு சரியான உணவாகும்.

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் என்ற நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்து உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள  ஓட்ஸ் சாப்பிடுவது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. தொடர்ந்து ஓட்ஸ் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால், ஓட்ஸ் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மெதுவாக ஜீரணமாகும்.

ஓட்ஸ்  வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. .ஒட்ஸுடன் உடற்பயிற்சி  உங்கள் உடை எடையை குறைக்க உதவும்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்