ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத சில பொருட்கள் என்ன தெரியுமா...?
சமைத்த பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். எனினும், தேனை ஃபிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
பூண்டை எப்போதுமே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்கவேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
வாழைப் பழத்தை ஃபிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப்போய் தோல் கருத்துவிடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
உருளைக் கிழங்குகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.