வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது. வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது. வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது.
வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது.
இலவங்கத்தின் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது.