இளநரை தோன்றுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்னவென்றால், தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை  உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம்.

* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக  வளரும்.
 
* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.
 
* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
 
* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்