ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
* ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.
* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும்.