மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் !!

வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:22 IST)
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும், நரம்புகளும் வலுப்படும்.


ஆண்களுக்கு உடல் பலத்தை அதிகரிக்கவும், ஆண்மை குறைபாடு பிரச்சனையை போக்கவும் மாப்பிள்ளை சம்பா அரிசி உதவுகிறது. எனவே ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் வளமான அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு, நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் தொற்று உண்டாகும் கிருமிகளை அழித்து நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, நரம்புகளுக்கும் வலுக்கொடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்