வெண்டைக்காய் ஊறவைத்த நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:07 IST)
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.


அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டக்காய் ஊற வைத்த நீர அருந்துவது நல்லது.

வெண்டைக்காய் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தல் இருமல்,நீர்கடுப்பு சரியாகும். வெண்டக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் இரத்த ஓட்டம் தூண்டப்படும்.

வெண்டைக் காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.     வெண்டைக் காயில் இருக்கும் கோந்து கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது. வெண்டக்காய் நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்