கருப்பு மிளகு உணவுக்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர, பசியை தூண்ட செயல்படுகிறது. அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.
மழை காலங்களில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெண்ணீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும். வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக இருக்கிறது.
கருப்பு மிளகு பல் வலிகளை குணப்படுத்துவதோடு வலிகளையும் குறைக்கும். உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி சாப்பிடறது ரொம்பவே நல்லது. கருப்பு மிளகு உடலில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது.