வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. கீரையில் போலிக் அமிலம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும். இதில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.