காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் வயிறுவலி அதிகமாக இருக்கும்போது, வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் வெந்நீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.