ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன. ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
 
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும்
 
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத்தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ  தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
 
இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி  அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
 
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும். ஏலக்காய் டீயை தொடர்ந்து  குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்