தினமும் காலையில் கற்றாழை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.


அதற்கு இந்த கற்றாழை ஜெல்லை ஜூஸ் போட்டு குடித்து வர வேண்டும். மேலும் பல நாட்டு மருந்து கடைகளிலும் கற்றாழை ஜூஸ் விற்கப்படுகிறது.
 
சோற்றுக்கற்றாழை சாறை பருகுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான். தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.
 
கற்றாழை ஜுஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
 
கற்றாழை ஜுஸ் குடிப்பதால் குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம். 
 
தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.
 
உடலில் நச்சுப் பொருட்களை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
செரிமான கோளாறு உள்ளவர்கள், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்