சித்த மருத்துவத்தில் இந்த கிழங்கை பாம்புக்கடி, பூச்சிக்கடி, தோல் நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுத்துகின்றனர். ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் சிறிய அளவு இதனை உட்கொள்வதால் உடனடியாக வாந்தி, பேதி உண்டாகி விஷம் முறிந்து வெளியேறிவிடும்.
ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண், சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து, குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப் பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும்.