நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும்,அதை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வு முற்றிலும் நின்று விடும்.
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். இரும்பு சத்து, புரோட்டின் நிறைந்துள்ள உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதின் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.