மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.
மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது. வாழைப்பழத்திற்கு இளக்கும் தன்மை உண்டு. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை உள்ளன.