இன்றைய தலைமுறையினர் குறிப்பாக இளஞர்கள், உடல் வலிமை இல்லாமல் காணப்படுகிறார்கள். இளைஞர்கள் பலரும் கூட அதிக உடல் பலகீன பிரச்சனையால் பாதிக்கப் படுகிறார்கள். உடல் பலவீனம் ஏற்படுவதால் அவர்களால் எந்த வேலையும் சரிவர செய்ய முடியாது. எப்பொழுதும் ஒருவித சோர்வாகக் காணப்படுவார்கள்.
உடல் சோர்வு இருப்பவர்கள், இந்த சீந்தில் செடியின் முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடியாக்கி காலை மாலை அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். கடினமான வேலைகளை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு அடிக்கடி கை, கால், முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.
வயது முதிர்ந்தவர்களுக்கு கை, கால், முதுகு வலி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகு வலி மிக அதிகமாக காணப்படும். இப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு தேய்மானம், எலும்பில் ஏற்படக்கூடிய தேய்மானம் போன்ற பிரச்சனைகளால் முதுகுவலி வரும். இப்படி வரக்கூடிய முதுகு வலி, கை, கால் அசதி பிரச்சனைகளையும் இந்த பொடியை சாப்பிடும் பொழுது குணமாக்கிவிடலாம்.