குங்குமப்பூவை பெண் கருவுற்றிருக்கும் போது உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு. குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்து, விழித்திரை சேதமடையாமல் தடுக்கிறது. வயதானவர்களின் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் குங்குமப்பூ முக்கியப்பங்கு வகிக்கிறது.
குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு, விழித்திரையை சீரமைக்கவும் உதவும். குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.