உடல் எடையை குறைக்கும் அந்த மருந்து என்னவென்றால் ‘தேன்’ தான் அந்த மருந்து. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அதனுடன் சிறிது முருங்கை இலைகளை 10 கிராம் அளவு கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இதற்கு பத்தியம் என்னவென்றால் அசைவ உணவுகள், பால், சர்க்கரை, நெய் போன்றவைகளை சாப்பிட கூடாது.
உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இரவு படுக்கச்செல்லும் முன் 1 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் தேன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்களுக்கு பத்தியம் கிடையாது. அதோடு முருங்கை இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை சுத்தமான தேன் மட்டும் போதும்.