சுக்குடன் மிளகு, திப்பிலி, சித்தரத்தை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர நாள்பட்ட கடுஞ்சளி பிரச்சினை தீரும்.
சுக்கு, வேப்பம்பட்டை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
சுக்கு, கருப்பட்டி மற்றும் மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை குடித்து வர மாந்தம் குணமாகும்.