மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தால் நாடு முழுவதும் கலவரங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பிரிவினரான பிறப்பு சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு என்ஆர்சி கொண்டு வரப் பட போவதாக தெரிகிறது. ஒருவர் தான் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடியின் குடியுரிமை சான்றிதழைக் காட்டுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம் மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.