இருந்த ஒன்னும் போச்சு: வரிக்குதிரைக்காக வருந்தும் பூங்காவினர்!!

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:46 IST)
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நந்தன்கனன் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இது கடந்த 1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


 
 
அதன் பின்னர் 1979 ஆம் ஆண்டு மக்கள் பார்வைக்காக திற்ந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 67 வகையான பாலூட்டி விலங்குகளும், 81 வகையான பறவையினங்களும், 18 வகையான ஊர்வனங்களும் உள்ளன.
 
இந்நிலையில், இந்த பூங்காவில் இருந்த ஒரே ஒரு வரி குதிரை நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குதிரை மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே வரிக்குதிரை இறந்ததற்கான காரணம் தெரியவரும். அந்த பூங்காவில் 4 வரிக்குதிரைகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மூன்று வரிக்குதிரைகள் நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.
 
தற்போது, இந்த பூங்காவில் பார்வைக்கு வைக்க வரி குதிரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வேறு விலங்கியல் பூங்காவில் இருந்து வரிக்குதிரையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்