ஆந்திர காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளா நியமனம்.. ஒரே மாநிலத்தில் மோதும் அண்ணன் - தங்கை..!

Siva

செவ்வாய், 16 ஜனவரி 2024 (14:29 IST)
இன்று காலை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ர ராஜு திடீரென ராஜினாமா செய்த நிலையில் சற்றுமுன் ஒய்.எஸ். சர்மிளா அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இது ஆந்திர அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆந்திராவில்  காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகள் மற்றும் தற்போதைய முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்ற முறையில், சர்மிளாவுக்கு ஆந்திராவில் கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக செயல்பட முடியும் என்று கருதப்படுகிறது.
 
காங்கிரஸ் கட்சியினர் சர்மிளாவின் நியமனத்தை வரவேற்றுள்ளதாகவும், மற்ற கட்சிகள் குறிப்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, இந்த நியமனத்தை விமர்சித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நியமனம் காரணமாக ஆந்திர அரசியலில் அண்ணன் - தங்கை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்