ஒடிசா மாநிலத்தில் அருவி அருகே ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக சென்ற பிரபல யூடியூபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் தங்கள் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சோகம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையேற முடியாமல் பாறைகளுக்கு நடுவே யூடியூபர் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், நண்பர்கள் கண் முன்னே அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அவர்களால் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மீட்பு குழுவினர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யூடியூபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை அவரை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள மோகம் இளம் உயிர்களை பலி கொள்வது பெரும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.