பைக்கில் சிங்கங்களை விரட்டும் இளைஞர்கள; வைரல் வீடியோ

வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:47 IST)
குஜராத் கிர் காட்டில் சுற்றித் திரியும் சிங்கங்களை நான்கு பேர் பைக்கில் துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சமூக ஆர்வலர்களின் கண்டனங்களை பெற்று வருகிறது.


 

 
குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயம் சிங்கள் வாழும் சரணாலயம் ஆகும். அங்கு சுற்றித் திரிந்த சிங்கங்களை பைக்கில் சென்ற நான்கு இளைஞர்கள் துரத்திச் செல்கின்றனர். சிங்கங்கள் பயந்து ஓடுகின்றன். இந்த காட்சியை வீடியோ எடுத்த சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
 
இந்த வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நான்கு இளைஞர்களில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் துரத்திச் சென்றத்தில் பயந்து ஓடிய சிங்கங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம்.
 

நன்றி: NDTV

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்