மணமகள் தேடி தரவில்லை.. மேட்ரிமோனியல் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த இளைஞர்..!

Siva

புதன், 19 ஜூன் 2024 (08:31 IST)
தனக்கேற்ற மணமகளை தேடி தரவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த மேட்ரிமோனியல் நிறுவனத்தின் மீது இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மணமகன், மணமகள் தேட வேண்டும் என்றால் இணையத்தில் மேட்ரிமோனியல் மூலம் தான் தேடப்பட்டு வருகிறது என்பதும் பெரும்பாலான திருமணங்களை மேட்ரிமோனியல் நிறுவனங்கள்தான் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியல் நிறுவனத்திடம் சந்தா தொகை செலுத்திய நிலையில், மாத சந்தா கட்டிய பிறகும் தனக்கு சரியான மணப்பெண்ணை அந்த நிறுவனம் தேடி தரவில்லை என்றும் இது குறித்து விளக்கம் கேட்டு போன் செய்தால் தனது அழைப்புகளுக்கு மேட்ரிமோனியல் நிறுவனத்தின் ஊழியர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் அவர் செலுத்திய சந்தா தொகை ரூபாய் 4100 மற்றும் வழக்கு செலவுக்காக இழப்பீடு என மொத்தம் 25 ஆயிரம் செலுத்தும் படி மேட்ரிமோனியல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்