மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.