’அது’ தள்ளிப்போனதால் இளம் ஜோடி தற்கொலை...

திங்கள், 3 டிசம்பர் 2018 (18:12 IST)
வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள காஸியாபாத் பகுதியில் ஒரே வயதுள்ள சுபாஷ் (23) மற்றும் பூஜா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவ்விருவரின் வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர்.
ஆனால் சுபாஷின் வீட்டார் திருமணத்துக்காக  வரதட்சணை கேட்கவே பூஜாவின் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இருவரின் வீட்டாரும்  மனம் ஒத்துப்போகாமல் பேச்சுவார்த்தையில் முரண்பட்டதால் சுபாஷும் , பூஜாவும் மன விரக்தி அடைந்தனர்.
 
இதனால் தம் காதல்  திருமணத்தில் சேர முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இளம் ஜோடிகள் இருவரும் விஷம் வாங்கிக் குடித்து தற்கொலை தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
 
ஆனால் இந்த தற்கொலை விவகாரம் பற்றி காவல் துறைக்கு ஏதும் புகார் வராததால் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்