முக்கியமாக இவரது வேலை என்று பார்த்தால் வேளாண் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசக்காடாக்கும் பன்றிகளை பிடித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்ப்பதுதான். பன்றிகள் தின்றழித்தால் முதலுக்கே மோசம் போகும் என்பதால் பன்றியை பிடிக்கும் மணிக்கு சிறுதொகை கொடுத்து கூடவே வைத்துக்கொண்டு தக்க சமயத்துக்கு அவரை பயன்படுத்தி வந்துள்ளனர் விவசாயிகள்.