இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு 6 இலக்க ஓடிபி கடவுச்சொல் வரும். அதை LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபி கடவுச் சொல்லை டைப்செய்து அனுப்ப வேண்டும்.இப்படிச் செய்தால் ஆதார் எண் முடக்கப்படும். இதுகுறித்த தகவலும் செல்போனுக்கு விரைவில் வரும்.
அடுத்து குறுஞ்செய்து மூலமாக முடக்கத்தை திரும்ப பெற வேண்டிமானால் ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு அனுப்ப வேண்டும். இதற்கு ஒரு ஓடிபி வந்ததும், UNLOCKUID - ஸ்பேஸ் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்கம், ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை அனுப்பினால் முடக்கம் ரத்தாகி ஆதார் திரும்ப செயல்படத் தொடங்கிவிடும்.
இந்தளத்திற்குள் சென்று மை ஆதார் என்பதை இயக்கி உள்ளே சென்றால் ஆதார் சர்வீஸ் என்று ஒரு அட்டவணை இருக்கும். அதில் ஆதார் லாக், மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்தோமானால் ஆதார் தவறாக உபயோகிக்கபடுவதில் இருந்து தவிர்க்கலாம்.