இந்தியாவின் சிறந்த முதல்வர் பட்டியல்.. உபி முதல்வர் யோகிக்கு முதலிடம்? ஸ்டாலினுக்கு எந்த இடம்?

Mahendran

சனி, 10 பிப்ரவரி 2024 (09:35 IST)
இந்தியாவின் பெஸ்ட் முதல்வர் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பெற்றுள்ளார். அவர் மீது கடும் விமர்சனங்கள் வைத்தாலும் அவர்தான் நாட்டின் சிறந்த முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் சிறந்த முதல்வர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மம்தா பானர்ஜி நான்காவது இடத்தில் மு க ஸ்டாலின் அவரை தொடர்ந்து நவீன் பட்நாயக், சித்தராமையா  , ஹிமந்த பிஸ்வா சர்மா , ஏக்நாத் ஷிண்டே, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் ஆகியோர் உள்ளனர்.

ALSO READ: 2024ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் எடுத்துள்ள இந்த கருத்துக்கணிப்பில் சொந்த மாநிலங்களில் எந்த முதல்வருக்கு செல்வாக்கு அதிகம் என்பதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 2வது இடத்தில் யோகி ஆதித்யநாத், 3வது இடத்தில்  ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் உள்ளனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்