வடகிழக்கு பருவமழை: தமிழகத்தை அடுத்து கேரளாவிற்கும் மஞ்சள் அலர்ட்

ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (20:50 IST)
தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 நவம்பர் 2ஆம் தேதி வரை கேரளாவில் உள்ள கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 மேலும் நவம்பர் 2 வரை மேற்கண்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்