இன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!