எவ்ளோ தைரியம் ?? ’உலகத் தலைவர்களை’ கேள்வி கேட்ட சிறுமிக்கு உயரிய விருது !

புதன், 25 செப்டம்பர் 2019 (18:37 IST)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இயற்கைக்கு ஆதரவாக பேசிய 16 வயதான இளம்பெண் கிரெட்டா  தன்பெர்க், இயற்கை மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் ஆவார்.
ஐநா சபையில் நடைபெற்ற பருவநிலை சார்ந்த உச்சி மாநாட்டில், பல்வேறு நாட்டு உலகத் தலைவர்கள்  பங்கேற்றனர். இதில், ஸ்வீடன் நாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலரான 16 வயது கிரெட்டா தன்பெர்க் பங்கேற்றார்.
 
அப்போது அவர் கூறியதாவது ; என்ன தைரியம் உங்களுக்கு .. பருவநிலை மாற்ற பாதிப்பை தடுக்க என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியதுடன். மக்களை ஏமாற்றுவதாக உலகத்தலைவர்கள் மீது குற்றம் சாட்டினார்.
 
அவர் கூறியதாவது :
 
பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் அழிவின் துவக்கத்தில் இருக்கிறோம்.ஆனால் நீங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாமல் பணம்,பொருளாதார வளர்ச்சி  கற்பனையாக உலகத்தைப் பற்றிப் பேசி வருகீர்கள்.. உங்களுக்கு எவ்வளவு தைரியம் ? என கேள்வி கேட்டார்.
 
மேலும், கனவுகளை திருடிவிட்டீர்கள், மக்கள் துன்பத்தில் பாதிக்கபட்டுள்ளனர். உலக மக்கள் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம் என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி, இறுதியில் அழுது, சரமாரியாக உலகத்தலைவர்களை குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில், நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படும் ’வாழ்வாதார உரிமை விருது’க்கு கிரெட்டா  தன்பெர்க்  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
 
நேற்று, ஐநா சபையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின், அமெரிக்க அதிபர் மத சுதந்திரம் தொடர்பான அடுத்த நிகழ்ச்சியில் ( meeting on religious Freedom)கலந்து கொள்ளச் சென்றார். அப்போதும் அதிபர் டிரம்ப் கிளம்பிச் செல்லும் போது, அவரை பார்த்த தன்பெர்க் முறைத்து பார்த்தபடி நின்றிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்