இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமை வழங்கப்படும்… தலிபான்கள் அறிவிப்பு!

புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தலீபான்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் முழுவதும் நசுக்கப்படும் என்பதே உலக மக்களின் அச்சமாக உள்ளது. அதற்கு 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை நடந்த அவர்களின் ஆட்சியே சாட்சி. ஆனால் இப்போது தாங்கள் மாறிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்